இந்தியன் ஆர்மியில் வேலை அறிவிப்பு! 55 காலி பணியிடங்களுக்கு இப்பவே அப்ளை பண்ணுங்க…!

Indian Army Recruitment 2024

இந்தியன் ஆர்மியில் வேலை செய்யவேண்டும் என்பது உங்களுடைய நீண்ட நாள் கனாவா? இதோ நீங்களும் ஆர்மியில் சேர்ந்து பணியாற்றலாம். NCC Special Entry என்ற இந்த பதவிக்கு தான் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறதாம். விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆர்மியானது NCC Special Entry பணியிடங்களுக்கு சுமார் 55 காலி பணியிடங்களை நிரப்புவதாக முடிவு செய்துள்ளது. NCC ஆண்கள் – 50 (பொதுப் பிரிவுக்கு 45 மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் போரில் உயிரிழந்த வார்டுகளுக்கு 05 மட்டும்)
என்.சி.சி பெண்கள் – 05 (பொது வகைக்கு 04 மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் போரில் உயிரிழந்த வார்டுகளுக்கு 01 மட்டும்) என மொத்தம் 55 பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

இப்பணியில் சேர நீங்கள் ஏதாவது ஒரு டிகிரி படிப்பை படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் மட்டுமே இப்பவிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். தேர்வாகும் நபர்கள் இந்தியாவின் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்.

Also Read >> இந்திய அஞ்சல் துறையில் 78 காலி பணியிடங்கள்! 10th படிச்சிருந்தாலே போதும்! மாசம் 63200 வரைக்கும் சம்பளம் வாங்கலாம்…!

NCC Special Entry வயது வரம்பு 01 ஜூலை 2024 இன் படி 19 முதல் 25 வயது வரை இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களின் சுருக்கப்பட்டியல்,
மருத்துவத்தேர்வு, SSB நேர்காணல் என்னும் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

NCC Special Entry சம்பளம் குறித்த விவரம்:

Lieutenant – Level 10 – Rs.56,100 – 1,77,500
Captain – Level 10B – Rs.61,300 – 1,93,900
Major- Level 11 – Rs.69,400 – 2,07,200
Lieutenant Colonel – Level 12A – Rs.1,21,200 – 2,12,400
Colonel – Level 13 – Rs.1,30,600 – 2,15,900
Brigadier – Level 13A – Rs.1,39,600 – 2,17,600
Major General – Level 14 – Rs.1,44,200 – 2,18,200
Lieutenant General HAG Scale -Level 15 – Rs.1,82,200 – 2,24,100
Lieutenant Gen HAG + Scale- Level 16 – Rs.2,05,400 – 2,24,400
VCOAS/Army Commander/ Lieutenant General (NFSG) -Level 17 – Rs.2,25,000/-(fixed)
COAS – Level 18 – Rs.2,50,000/-(fixed)

இந்திய ராணுவம் 55 NCC சிறப்பு நுழைவுத் திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindianarmy.nic.in/ வழியாக 09.01.2024 முதல் 06.02.2024 வரை தேதிக்குள் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியன் ஆர்மி அறிவித்த வேலை பற்றிய விவரங்களை அறிய Indian Army NCC Special Entry Recruitment 2024 Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

NCC Special Entry வேலைக்கு விண்ணப்பிக்க Indian Army NCC Special Entry Recruitment 2024 Apply Online என்ற இந்த லிங்கை பயன்படுத்தி உடனே அப்ளை பண்ணுங்கள்.

Scroll to Top