இந்திய அஞ்சல் துறையில் புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தமாக 78 டிரைவர் காலி இடங்களை ஒதுக்கியுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட அதிகார்வபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அவற்றை தவறில்லாமல் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அவற்றை இணைத்து தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளாலாம். மேலும் இது குறித்த விவரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.
டிரைவர் பதவிக்கு ஆட்கள் தேவையென இந்திய தபால் துறை தனது அதிகார்வபூர்வ இணையத்தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10வது படித்திருக்க வேண்டும். மேலும், LMV ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
இந்திய போஸ்ட் ஆபிஸ் அறிவித்த அறிவிப்பின் படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 27 வரைக்கும் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடம் வயது தளர்வும், SC, ST பிரிவினர்களுக்கு 5 வருடம் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். ஓட்டுனர் உரிமம், வர்த்தக சோதனை, ஓட்டுநர் சோதனை, தியரி டெஸ்ட், நடைமுறை சோதனை ஆகிய அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரைக்கும் கொடுக்கப்படும். இந்த வேலைக்கு தேர்வாகும் விண்ணப்பத்தாரர்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.01.2024 முதல் 16.01.2024 வரை தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Manager (GR.A), Mail Motor Service Kanpur, GPO Complex, Kanpur-208001, Uttar Pradesh
மேலும், போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு விவரங்களை அறிய மற்றும் விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்ய Notification link & Application Form என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.