IDBI வங்கியில் 500 காலி பணியிடங்கள்! டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்…!

IDBI Bank Recruitment announced 500 Assistant Manager jobs Graduate can apply online

IDBI வங்கி வேலைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? இந்திய தொழில் வளர்ச்சி வங்கியானது தற்போது புத்தம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், உதவி மேலாளர் என்ற பதவியை நிரப்படவுள்ளது. எனவே தகுதியுள்ள நபர்கள் தவறாமல் ஆன்லைன் மூலமாக அப்ளை பண்ணலாம். மேலும், இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? எவ்வளவு சம்பளம், கல்வித்தகுதி, அப்ளை செய்ய கடைசி தேதி எப்போது போன்ற விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தொடர்ந்து படியுங்கள்.

கல்வித்தகுதி

உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Graduate படிப்பில் தேர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும்.

பணியிடம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் எந்தவொரு நபரும் நம்ம இந்தியா முழுவதும் வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.

Also Read >> மாத ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய்… கரூர் வைஸ்யா வங்கியில் வேலை செய்ய ரெடியா?

காலி இடங்கள்

IDBI வங்கி அறிவித்த இந்த பணிக்கு மொத்தமாக 500 காலி பணியிடங்களை ஒதுக்கியுள்ளது. எனவே இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 31-01-2024 இன் படி குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

General/ OBC : Rs. 1,000/-
SC/ST/PWD/Ex-Serviceman : Rs. 200/-

குறிப்பு : இந்த விண்ணப்பக்கட்டண தொகையை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

சம்பள விவரம்

உதவி மேலாளர் பதவிக்கு ஆண்டு வருமானமாக ரூ.6,14,000 முதல் ரூ.6,50,000 வரைக்கும் கொடுக்கப்படும்.

தேர்வு முறை

ஆன்லைன் எக்ஸாம், ஆவண சரிபார்ப்பு, இன்டர்வியூ ஆகிய அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எனவே, வங்கி வேலை செய்ய ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் Apply link இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக அப்ளை பண்ணவும். மேலும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிய Notification Link என்ற இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top