தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்துல பணியாற்ற ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு! 1,00,000 ரூபாய் மாத சம்பளம் வாங்கலாம்…!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்(NIE) என்பது தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகும். NIE சென்னை ஆலோசகர் பணியில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை nie.gov.in இல் வெளியிட்டுள்ளது. ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் மிக குறுகிய கால அவகாசம் தரப்பட்டுள்ளதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

ALSO READ : DHS துறையில் துப்புரவு பணியாளர், பாதுகாப்பு காவலர், உதவியாளர் பணியிடங்கள்! 8th, Any Degree, Diploma, ITI படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்…!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் Consutant வேலையில் மூன்று காலியிடங்களை நிரப்ப உள்ளது. NIE சென்னை இந்த வேலைக்கு தேர்வு செய்யும் நபர்களை சென்னையில் பணியமர்த்தும். Consultant – Epidemiology (Medical) இரண்டு பணியிடமும், Consultant -Infectious Disease Modelling ஒரு பணியிடமும் உள்ளது. NIE சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MBBS, முதுகலை பட்டம், MD, DNB, Ph.Dமுடித்தவர்கள் இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 70 ஆக இருக்க வேண்டும். ஆலோசகர் பதவிக்கு இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,00,000 வழங்கப்படும். அப்ளிகேசன் பீஸ் இல்லை.தகுதியானவர்கள் NIE சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான nie.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க 03-01-2024 முதல் 14-ஜன-2024 வரை மட்டுமே டைம் தரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த வேலையில் சேர அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

மேலும் இந்த பணி குறித்த விவரங்களை அறிய NIE Chennai Recruitment 2024 Notification லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top