வங்கி வேலை தேடுபவரா நீங்க? இதோ கரூர் வைஸ்யா வங்கியில் அட்டகாசமான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. Branch Relationship Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கென பல்வேறு காலியிடங்களை ஒதுக்கியுள்ளது. இப்பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக அப்ளை பண்ணலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும். Branch Relationship Manager வேலைக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் வயது 35 வயது இருக்க வேண்டும்.
Also Read >> இந்தியன் ஆர்மியில் வேலை அறிவிப்பு! 55 காலி பணியிடங்களுக்கு இப்பவே அப்ளை பண்ணுங்க…!
இந்த வேலைக்கு இன்டர்வியூ முறையில் தேர்வாகும் விண்ணப்பத்தாரர்கள் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா முழுவதும் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சேரும் நபர்களுக்கு 8,00,000 ஆண்டு வருமானமாக பெறலாம்.
வங்கி வேலையில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் 08.01.2024 முதல் 31.03.2024 என்ற தேதி வரைக்குள் ஆன்லைனில் அப்ளை செய்யவும்.
மேலும் விவரங்களை அறிய KVB Recruitment 2024 Notification அறிந்துகொண்டு Apply Link இல் விண்ணப்பிக்கவும்.