டிகிரி முடித்திருந்தால் போதும் மத்திய அரசின் இந்த வேலைக்கு அப்பளை பண்ணலாம்! நம்ம சென்னையிலே தான் வேலை!

டிகிரி முடித்திருந்தால் மத்திய அரசின் இந்த வேலை

உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம்(CIBA) இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தால் (ICAR) சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆய்வுக் கழகமாகும். சென்னையை தலைமையகமாக கொண்ட CIBA புதிய வேலை வாய்ப்பை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த Young Professional – I பணியில் ஒரு இடம் காலியாக உள்ளது. இந்த அருமையான வேலை வாய்ப்பை தவிறவிடாதீர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பித்து விடுங்கள். தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை படித்து பயன் பெறுங்கள்.

கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

ALSO READ :இந்திய கப்பல் போக்குவரத்து துறையில் வேலை செய்ய வேண்டுமா? அப்ப இந்த பதிவை பாருங்க!

வயது வரம்பு : நேர்காணல் நடைபெறும் தேதியின்படி ஆண்களுக்கு அதிகபட்சமாக 35 வயதும், பெண்களுக்கு அதிகபட்சமாக 40 வயதும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : General/ OBC/SC/ST/PWD/Ex-Serviceman ஆகிய எந்த பிரிவினரும் அப்ளிகேசன் பீஸ் கட்ட தேவையில்லை.

பணியிடம் : நேர்காணலில் செலக்ட் ஆகும் நபர் சென்னையில் வேலையில் சேரலாம்.

சம்பளம் : Young Professional – I பணிக்கு மாத சம்பளம் ரூ.30,000 வழங்கப்படும் என உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யும் முறை : CIBA பணியாளர்களை தேர்ந்தெடுக்க எழுத்து தேர்வு ஏதும் இல்லாமல் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்கிறது.

முக்கிய தேதிகள் : Young Professional – I வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 4, 2024 முதல் ஜனவரி 16, 2024 வரை மட்டும் அப்ளை பண்ண டைம் கொடுக்கப்பட்டுள்ளது.

CIBA-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.ciba.res.in சென்று விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

மேலும் சில தகவல்களை பெற வேண்டும் என்றால் Official Notification பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top