இந்திய கப்பல் போக்குவரத்து துறையில் வேலை செய்ய வேண்டுமா? அப்ப இந்த பதிவை பாருங்க!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் இந்திய கப்பல் போக்குவரத்துகழகம்( Shipping Corporation of India or SCI)ஒன்றாகும். இந்த நிறுவனம் மும்பையை மையமாக கொண்டு இயங்குகிறது. அக்டோபர் 2, 1961 இல், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், கிழக்கு கப்பல் கார்ப்பரேஷன் மற்றும் வெஸ்டர்ன் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் இந்தியாவின் முதல் கப்பல் போக்குவரத்து நிறுவனமாக இணைக்கப்பட்டது.

ALSO READ : சூப்பரான காட்டன் சில்க் சேலை! கட்டி பாருங்க… செம அழகா இருப்பீங்க! ஆர்டர் பண்ண ரெடியா?

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கணக்கு உதவியாளர் பதவிக்கு வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை shipindia.com இல் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தில் 9 பணியிடம் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 25, 2024 முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • SCI அதிகாரபூர்வ அறிவிப்பின் படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CA, CMA பட்டம் முடித்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.
  • ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-01-2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 25 ஆக உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • Accounts Assistant வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாத சம்பளமாக ரூ.22,500 முதல் ரூ.27,500 வரை வழங்கப்படும்.
  • இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர் மும்பை – மகாராஷ்டிராவில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
  • SCI நிறுவனமானது Interview அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது
  • அப்ளிகேசன் பீஸ் தேவையில்லை என இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் SCI அதிகாரப்பூர்வ வலைத்தளமான shipindia.com இல் ஜனவரி 5,2024 தேதியிலிருந்து ஜனவரி 25, 2024 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SCI-ன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான தேவையான ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்து அனைத்து விவரங்களையும் சரிபார்த்துவிட்டு shorrecruitment@sci.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை மேலும் அறிந்துகொள்ள SCI Recruitment 2024 Notification லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top