RPF Recruitment 2024 | 10th, டிகிரி படித்தவரா நீங்க? ரயில்வே பாதுகாப்பு படையில் 2250 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க…!

RPF Recruitment 2024 | Apply Online for 2250 Sub Inspector, Constable Posts

RPF Recruitment 2024 Apply Online for 2250 Sub Inspector Constable Posts

மத்திய அரசின் ரயில்வே பாதுகாப்பு படையில் வேலை செய்ய ஆசையா இருக்கா உங்களுக்கு? இதோ அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் பணிக்கென புதிய பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் எப்படி இப்பணிக்கு அப்ளை செய்ய வேண்டும் என அனைத்து தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். கவனமாக தொடர்ந்து படியுங்கள்.

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் என்ற பதிவிக்கான பணியிடத்தை தான் நிரப்ப உள்ளனர். இப்பணிக்கென மொத்தமாக 2250 காலி இடங்களை ஒதுக்கியுள்ளது. அதில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கென 250 காலி பணியிடங்களும், கான்ஸ்டபிள் பதவிக்கென 2000 பணியிடங்களும் நிரப்ப அறிவித்துள்ளது.

Also Read >> மாதம் 1,00,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட NIRT சென்னை!

சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவின் எந்த பகுதியிலும் வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 25 வயது வரைக்கும் இருக்க வேண்டும். மேலும் OBC பிரிவினர்களுக்கு 3 வருடம் வயது தளர்வும், SC, ST பிரிவினர்களுக்கு 5 வருடம் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையில் அறிவித்த சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பதாரர் ஏதாவது ஒரு டிகிரி படிப்பை படித்திருக்க வேண்டும். அதே போல கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு கணினி அடிப்படையிலான சோதனை, உடல் திறன் சோதனை & உடல் அளவீட்டு சோதனை, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் என்ற அடிப்படையில் தான் பணியாளர்களை தேர்வு செய்கிறது. மேலும், மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க General/OBC ரூ.500 மற்றும் SC/ST/Female Candidates/Ex-servicemen/EBC ரூ.250 என விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் 06.01.2024 என்ற தேதி முதல் 31.1.2024 என்ற தேதி வரைக்கும் ஆன்லைன் வழியாக அப்ளை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பொன்னான மத்திய அரசாங்க வேலையை மிஸ் பண்ணிடாதீங்க.

இது குறித்த மேலும் தகவலை அறிய RPF Recruitment 2024 Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

Sub Inspector, Constable வேலைக்கு ஆன்லைன் வழியாக அப்ளை செய்ய RPF Apply Online என்ற இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

இந்த மாதிரி மத்திய அரசு வேலை வாய்ப்பு தகவல்களை உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top