10th,Degree மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவங்களுக்கு தமிழக அரசின் அருமையான வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

10th,Degree மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவங்களுக்கு தமிழக அரசின் அருமையான வேலை

இந்து சமய அறநிலையத் துறை(TNHRCE) எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பணிபுரிய விண்ணப்பங்களை வரவேற்கிறது. கிளார்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைகளுக்கு பணியாற்ற ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பதவியில் மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளது. குறைந்த பணியிடங்கள் மட்டும் உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 03/01/2024 முதல் 30/01/2024 வரை இந்து சமய அறநிலையத் துறையின் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

ALLSO READ : மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை! ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள்!

எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பணிபுரிய கல்வி தகுதியானது Clerk பணிக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும், Nadaswaram,Thottam,Thiruvalagu பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தும்,Computer Operator பணிக்கு Degree முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் செலுத்த தேவையில்லை.

இந்த TNHRCE அறிவிப்பிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பணியமர்த்தப்படுவார்கள். எழுத்தர், கணினி பணியாளர், நாதஸ்வரம் பணிக்கு மாத சம்பளம் ரூ.15300-48700/- , தோட்டப் பணிக்கு மாத சம்பளம் ரூ.11,600-36,800/-, திருவலகு பணிக்கு மாத சம்பளம் ரூ.10,000-31,500/- வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இந்து சமய அறநிலையத் துறை விண்ணப்பப் படிவத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் இருந்து எடுத்து பூர்த்தி செய்து நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும். விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
எட்டுக்குடி,
திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
அஞ்சல் எண்- 610204.

மேலும் விவரங்களை அறிய Official Notification & Application Form லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top