உங்க குழந்தைகளும் இனிமே 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட் போன் யூஸ் பண்ண முடியும்..! அரசின் புதிய அறிவிப்பு!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனை பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஸ்மார்ட் போன்களில் எந்த அளவிற்கு நல்லது இருக்கிறதோ அதே அளவிற்கு தீமையும் உள்ளது. ஆனால், தற்பொழுது உள்ள சூழ்நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை விட ஸ்மார்ட் போன்களில் தான அதிகம் செலவிட்டு வருகின்றனர்.

Your children can use smart phone only for 2 hours from now Governments new announcement watch now

இந்நிலையில், குழந்தைகள் ஸ்மார்ட் போன்களில் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்த சீனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மொபைல் சாதனங்களில் பெரும்பாலான இணைய சேவைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

மேலும், 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். 8 வயதுக்குட்பட்டவர்களுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM