இனிமே ரேஷன் கடையில ரொம்ப நேரம் நிக்க தேவையில்லை! அரசின் புதிய மாற்றம்!

0
10
இனிமே ரேஷன் கடையில ரொம்ப நேரம் நிக்க தேவையில்லை! அரசின் புதிய மாற்றம்!

நம்முடைய அன்றாடம் வாழ்கையில் அரசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், மண்ணெண்ணெய் அத்தியாவசியமான பொருளாக காணப்படுகிறது. இந்த பொருளை ரேஷன் அட்டை மூலம் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் வாங்குகிறோம். இத்தகைய பொருட்களை தமிழக அரசே விநியோகம் செய்கிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். மேலும், நியாயவிலை கடைகள் சரியாக இயங்கி வருகிறதா என அரசு அதிகாரிகள் மூலம் நேரடியாக ஆய்வை மேற்கொள்கிறது.

இந்நிலையில், கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை என்ற ஒரு புதிய முயற்சியை தொடக்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக ரொம்ப பழமையான கட்டிடங்கள் அனைத்தும் வண்ணம் பூசி மற்றும் சீரமைப்பு பணிகளை தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கழிப்பறை வசதி, மாற்று திறனாளிகளுக்கென சாய்வுதள வசதி, முதியோகளுக்கு உட்காருவதற்கு ஓய்விருக்கை முதலியவற்றை அமைத்து வருகிறது.

முதல் கட்டமாக 75 ரேஷன் கடைகள் வண்ணம் பூசி சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினால் இதுவரை மொத்தம் 2,975 ரேஷன் கடைகள் புதுபொலிவாக மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் ரேஷன் கடைகளுக்கும் ஐஎஸ்ஒ தரசான்றுகள் கிடைத்து வருகிறது. இதுவரை மொத்தம் 5,784 கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று கிடைத்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here