வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்திலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் ஆடை கட்டுப்பாடு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றில், ஜீன்ஸ் பேன்ட், மாடன் டிரெஸ் போன்ற எந்தவொரு ஆடையும் அணிந்து வர கூடாது போன்ற பல ரூல்ஸ்கள் போடப்பட்டுள்ளது. இந்த ரூல்ஸ்களையெல்லாம் ஃபாளோ பண்ணால் மட்டுமே நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்றும் பல நிறுவனங்கள் சொல்லி கொண்டு தான் வருகின்றனர்.

அந்த வகையில், தற்பொழுது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஜீன்ஸ், டி-சர்ட், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்து அலுவலகத்திற்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளது.
Also Read : சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டாயிடுச்சு… பிக்பாஸ் சீசன் 7 னின் புதிய ப்ரமோ வெளியீடு!!
மேலும், அலுவலகத்திற்கு வரும் ஒரு ஆண் சாதாரண பேண்ட், சட்டைகளை மட்டுமே அணிந்து பணிக்கு வர வேண்டும் என்றும் பெண் ஊழியர்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் சல்வார் அணிந்து மட்டுமே வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.