நீங்களும் நீச்சல் கத்துக்கலாம்…! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!

0
20
Today News in Tamil

கோடைக்கால விடுமுறை என்றாலே ஒரே கொண்டாட்டம் தான்…ஏனென்றால் கிடைக்கும் விடுமுறையை குழந்தைகளோடும், உறவினர்களோடும் வெளி இடங்களுக்கு சென்று தங்களுடைய பொழுதுபோக்கை செலவிடுவார்கள்.

இந்நிலையில் நெல்லையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் நீச்சல் பயிற்சி முகாம் ஒன்றை புதிதாக தொடங்கியுள்ளது.

மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி அறிவித்துள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கம், சீவலப்பேரிசாலையில் 50 மீட்டர் அளவில் நீச்சல் குளம் பயிற்சி முகம் தொடங்கியுள்ளது.

நீச்சல் பயிற்சி முகாம் முதல் கட்டமாக மே 7ஆம் தேதி தொடங்கும். இரண்டாம் கட்ட பயிற்சி மே 9ஆம் தேதி முதல் மே 21 வரையிலும், மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே 23 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி முகாம் காலை 6 to 7, 7:15 to 8.15, 8.30 to 9.30 மணி வரையிலும் நடைபெறும். பிற்பகல் 3.30 to 4.30 மணி வரையிலும், மாலை நேரத்தில் 5.30 to 6.30 மணி வரையிலும் இந்த நீச்சல் பயிற்சி கொடுக்கப்படும். இந்த பயிற்சி முகாம் ஜூன் மாதம் நான்காம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

இந்த கோடைக்கால விடுமுறையை பிரயோஜனமாக பயன்படுத்தி மகிழவும்…


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here