ஏலியனுடன் பொங்கல் கொண்டாடும் சிவகார்த்திகேயன் ஃபேமிலி… வைரலாகும் புகைப்படும்…!

Sivakarthikeyan family celebrating Pongal with Alien

டைரக்டர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் அயலான். இந்த திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படம் ஜனவரி 12-ந் தேதி அன்று அனைத்து தியேட்டர்களிலும் வெளியானது. இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. தமிழகம் முழுவதும் வெளியான இப்படத்தை காண குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் இப்படத்தை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர். முக்கியமாக படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் அளவிற்கு இருப்பதால் ரசிகர்ள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

Also Read >> 8th, 10th தான் படிச்சிருக்கீங்களா? உங்களுக்குத்தான் TNRD துறையில் வேலை ரெடியா இருக்கு…!

இந்நிலையில் பொங்கல் தினமான இன்று தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவதை தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை பதிவிட்டார். அதில் அவர்களின் நடுவே அயலான் படத்தின் ஏலியன் நிற்பது போல எடிட்டிங் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அவர் செய்த பதிவில், இந்த முறை எங்களுக்கு அயலான் பொங்கல் எனவும், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

சினிமா நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top