பழக்கடைகாரருக்கு அடிச்சது ஜாக்பாட்! 3.80 கோடி சொத்தை எழுதி வைத்த கஸ்டமர்! என்ன தான் நடந்தது?

World News in Tamil

World News in Tamil

பழ வியாபாரி ஒருவருக்கு தனது கஸ்டமர் தனது வீட்டையே எழுதி கொடுத்துள்ளார். இதனுடைய சொத்து மதிப்பே 3.80 கோடி ஆகும். அப்படி என்னதான் நடந்தது? எதனால் தனது வீட்டையே எழுதி கொடுத்தார் என இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சீனாவிலே உள்ள ஷாங்காய் நகரில் வசிப்பவர் தான் லியூ. இவர் அங்கே பழக்கடை ஒன்றை பல வருடமாக நடத்தி வந்தார். அவரது வீட்டின் அருகே வசிக்கும் முதியவர் தான் மா. இவருக்கும் பழக்கடை ஓனர் லியூ க்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென மா முதியவரின் மகன் இறந்துவிட்டார். அதன் பிறகு லியு தான் அந்த முதியவரை நன்றாக பார்த்துகொண்டார்.

மா என்ற முதியவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். ஆனால் அவருடைய சொத்தில் ஒரு பங்கை கூட யாருக்கும் எழுதி வைக்கவில்லை. எல்லா உறவினர்களும் இருந்தும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. முதியவர் மா சாகும் வரைக்கும் லியு தான் கவனித்து வந்தார். இந்நிலையில் முதியவர் மா திடீரென உயிரிழந்து விட்டார். இதற்கு பிறகு தான் அவரது உறவினர்களுக்கு பெரிய ஷாக் வெயிட்டிங்கில் இருந்தது.

அதாவது, மா எழுதி வைத்து சென்ற உயிலை படித்து பார்த்த உறவினர்களுக்கு தலையே சுற்ற ஆரம்பித்துவிட்டது. அதில், தனக்கு சொந்தமான சுமார் 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை தன்னை அன்பாக பத்திரமாக கவனித்த பழக்கடை வியாபாரி லியு பேருக்கு எழுதி வைத்து சென்றுள்ளார்.

Also Read >> CMC வேலூரில் பணியாற்ற அருமையான வாய்ப்பு! ரூ.32870 மாச சம்பளம் வாங்கலாம்…!

இதனையடுத்து, முதியவர் மா வின் உறவினர்கள் ஷாங்காய் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்துள்ளனர். அதாவது மா என்பர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். அந்த நிலையில் லியு அவரை ஏமாற்றி அவரது சொத்துக்களை அபரித்து விட்டதாக உறவினர்கள் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால் இந்த வீட்டை 2020 ஆம் ஆண்டே அவர் எழுதிவிட்டதாக பழக்கடைகாரர் லியு தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழக்கடைகாரர் லியு பக்கம் தான் நியாயம் உள்ளது என கூறி, முதியவர் மா உறவினர் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இச்சம்பவம் சீனாவிலே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top