ஆகாயத்தில் பறக்கும் ஹோட்டல்! ஜிம் முதல் நீச்சல் குளம் வரைக்கும் அசர வைக்கும் வசதி…!

ஆகாயத்தில் பறக்கும் ஹோட்டல்! ஜிம் முதல் நீச்சல் குளம் வரைக்கும் அசர வைக்கும் வசதி...!
ஆகாயத்தில் பறக்கும் ஹோட்டல்! ஜிம் முதல் நீச்சல் குளம் வரைக்கும் அசர வைக்கும் வசதி…!

நம்மில் பலரும் ஒரு சுற்றுலதளத்திற்கு சென்றாலோ அல்லது வெளிநாட்டு பயணம் சென்றாலோ பெரிதும் தங்களது வசதிக்கு ஏற்றவாறு ஹோட்டல்களிலே தங்குவோம். அந்தவகையில் ஹோட்டல்களிலே சில ஹோட்டல்கள் மிகவும் ஆடம்பரமாகவும் மற்றும் பிரமாண்டமாகவும் இருக்கும். சில ஹோட்டல்கள் வித்தியாசமாக தனித்து காணப்படும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள Escher Cliff ஹோட்டல், மாலத்தீவின் ரங்காலி தீவில் உள்ள Conrad Hotel, பிரான்ஸ் நாட்டில் உள்ள Ettrapreves ஹோட்டல், இத்தாலி நாட்டில் இருக்கும் Grotta Hotel போன்றவையெல்லாம் பார்க்கும்போதே நம்மை சிலிர்க்க வைக்கும்.

Also Read >> 60,000 சம்பளத்தில் சென்னையில் வேலை வேண்டுமா? TNTPO வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு!

இப்படிப்பட்ட ஹோட்டலை பார்த்துவிட்டு வானத்தில் ஒரு ஹோட்டல் இருக்குறது என்பதை சொன்னால் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஆம் இதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். பார் வசதி, உணவகம், விளையாட்டு வளாகம், வணிக வளாகம், தியேட்டர், விளையாட்டு மைதானம், மேலும் உள்ளே ஒரு மாநாட்டு மையமும் இருக்கிறது. அங்கே எந்த நிகழ்ச்சி வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யலாம்.

இதுகுறித்து X தளத்தில் @Rainmaker1973 கணக்கிலிருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஏமன் நாட்டை சேர்ந்த பொறியாளர் ஹஷேம் அல்-கைலி இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதில் அவர் ” இது ஒரு பெரிய அணுசக்தியால் வானத்தில் இயங்கக்கூடிய பறக்கும் ஹோட்டல். இது எப்போதும் வானத்தில் பறந்துகொண்டே தான் இருக்கும். இதில் சுமார் 5000 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம். ஜிம் முதல் நீச்சல் குளம் வரைக்கும் அசர வைக்கும் வசதிகளோடு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வானத்தில் பறக்கும் மேகங்களுக்கு நடுவே இருப்பது எல்லோரையும் சிலிர்க்க வைக்கும் என கூறியுள்ளார்”. மேலும் இதனை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top