மகளிருக்கான கிரிக்கெட் போட்டி – முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வென்றது பாகிஸ்தான்…!

Today Sports News 2023

Today Sports News 2023

பாகிஸ்தானில் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் ( 50 ஓவர் ) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி கலந்து கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் நேற்று, இவ்விரு அணிகளுக்கும் இடையே 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. அதில் டாஸ்க்கை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை அடித்தது. இதனை தொடர்ந்து 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணியை ஒய்ட்வாஷ் செய்தது. இதனைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கிடையே வருகின்ற 8-ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது.