பெண்களுக்கான சமையல் டிப்ஸ்..!

0
110

சமையல் குறிப்புகளில்… மிகவும் முக்கியமாகவும் கவனிக்க கூடியதாகவும் இருக்க வேண்டியது, சமையலறை பொருட்களின் பராமரிப்புக்கான குறிப்புகள் தான். அவற்றில் ஒரு சில குறிப்புகளை தற்போது காணலாம்.

1. பச்சை மிளகாய்

பச்சை மிளகாய்

நீண்ட நாட்களுக்கு பச்சை மிளகாய் அப்படியே இருக்க, நிழலான இடத்தில் அதன் காம்பை நீக்கிவிட்டு வைத்தாலே போதுமானது. பச்சை மிளகாய் கெட்டு போகாமல் இருக்கும்.

2. தோசை

தோசை

கல்லில் தோசை மாவு ஒட்டிக்கொண்டால், சிறிதளவு புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதனை எண்ணெயை தொட்டு கல்லில் தேய்த்தால் போதும். தோசை கல்லில் ஒட்டாமல் நன்றாக வரும்.

3. தேங்காய்

தேங்காய்

தேங்காயை உடைத்து உடனே கழுவி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்படி வைப்பதால் தேங்காயில் பிசுபிசுப்பு தன்மை வராது.

4. தயிர்

தயிர்

நீண்ட நேரம் தயிர் புளிக்காமல் இருக்க, சிறிது இஞ்சியை மேல் தோலை நீக்கி விட்டு, தட்டி போடலாம். இது தயிரை புளிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

5. மைதா, ரவை

மைதா, ரவை

புழு-பூச்சிகள் ரவை மற்றும் மைதாவில் வராமல் இருக்க, சமையலுக்கு பயன்படுத்தும் வசம்பை சிறிதளவு தட்டிப் போடலாம். இதனால் மைதாவும் ரவையும் புழு-பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

6. காய்ந்த மிளகாய்

காய்ந்த மிளகாய்

காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வராமல் இருக்க, சிறிது உப்பு சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு வறுத்தால், நெடி வராது.


RECENT POSTS IN VALAIYITHAL:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here