உங்க அன்பினால் நிச்சயமா போராடி மீண்டு வருவேன்! சமந்தா உறுதி…!

Today Cinema News 2023

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு வகையான சிகிச்சைகள் எடுத்தும் பூரணமாக இந்நோய் குணமாகவில்லை. இதனையடுத்து அமெரிக்கா சென்று இதற்கான சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ள்ளார். இதனால் புதிய படங்களில் நடிக்கவில்லை. மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா அட்வான்ஸ் பணத்தையும் கூட திருப்பிக்கொடுத்துவிட்டார்.

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாக்கி இருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.‌ செப்டம்பர் 01 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த விழாவில் நடிகை சமந்தா பேசியாதவது, என்னுடைய திரையுலக பயணத்திலே மறக்க முடியாத படம் என்றால் அது குஷி படம் தான். இதில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவ நிர்வானாவிற்கு நன்றி. ரசிகர்களுக்கவே படங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். என் மீது காட்டும் உங்கள் அன்பினால் நான் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன் என கூறினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் விஜய்தேவரகொண்டா பேசும்போது, சமந்தா முகத்தை பார்க்கும் போது அவரது சிரிப்பை மட்டுமே பார்க்க ஆசைப்படுகிறேன். அவருடைய மயோசிடிஸ் நோயானது முழுமையாக குணமடையவில்லை. ஆனாலும் அவர் இந்த படத்தில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டு கடுமையான வேதனையில் தான் இருந்தார். இவ்வளவு சூழ்நிலையிலும் அவர் சிரித்த முகத்தோடு மட்டுமே இருக்கிறார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM