ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன்… தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து இராணியின் உடலுக்கு பாதுகாப்பு!

0
97

ஸ்காட்லாந்து, பால்மரில் கடந்த 8-ஆம் தேதியன்று இங்கிலாந்தின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் காலமானார். இவரது உயிரிழந்த உடலை, காரில் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பெர்க்கு எடுத்து வரப்ப்பது.

பின்னர், மகாராணியின் உடல் புனித கில்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டதால், பாதுகாவலர்கள் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப் பணியில் தேவாலயத்தை சுற்றி உள்ள க‌ட்ட‌டங்களில் ஈடுபட்டனர்.

மேலும் ஸ்காட்லாந்து அரச வழிமுறைப்படி பாதுகாப்புப் பணியில், அரண்மனை மெய்க்காப்பாளர்களும், வில்லாளர்களும் வெள்ளை மலர்கள் வைக்கப்பட்ட மகாராணியின் உடலைச் சுற்றி பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

பொதுமக்களின் அஞ்சலிக்காக குறிப்பிட்ட இடைவெளியில் பாதுகாப்பு வளையங்கள் போடப்பட்டது. ஸ்காட்லாந்தில் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திட, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

அதன் பின்னர், இன்று மகாராணியின் உடல் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நாளை முதல் நான்கு நாட்கள் வரையிலும், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மகாராணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அங்கும் வைக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது விரிவாக செய்யப்பட்டு வருகின்றது. மேலும், பல லச்சக்கணக்கான பொதுமக்கள் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருவார்கள் என்பதாலே, பெரிய அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here