தமிழகத்தில் நீட் தேர்வு ரத்தா? ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன அதிரடி பதில்!!

முன்னதாக நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று நினைத்தால் முதலில் நீட் என்ற நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த நீட் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் மருத்தவ சேர்க்கைக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்நிலையில், இந்த நீட் தேர்வுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அங்குள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடினார். அப்பொழுது, ஒரு மாணவரின் பெற்றோர் எங்கள் பிள்ளைகள் நீட் தேர்வு எழுத அதற்கென்று தனியாக பணம் செலுத்தி படிக்க வேண்டியுள்ளது. இந்த சூழலை தவிர்க்க நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது கையெழுத்திட உள்ளீர்கள் என கேட்டார்.

அப்பொழுது, இந்த கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவுக்கு நான் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று தெரிவித்தார். இந்த நீட் தேர்வின் மூலமாகத்தான் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்க முடிகிறது என்று கூறினார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM