என்னாது மறுபடியும் இவ்வளவு மின்கட்டணம் உயர்வா? உடனே படிங்க…

0
12
என்னாது மறுபடியும் இவ்வளவு மின்கட்டணம் உயர்வா உடனே படிங்க

மின்சாரம் இல்லனா நம்ம வாழ்க்கையே ஓடாது. ஏனென்றால் எல்லாவற்றிக்கும் மின்சாரம் என்பது ஒரு மிக பெரிய அடிப்படையாக இருக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஏற்கெனவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தநிலையில் தற்போது யூனிட்டுக்கு ரூ.70 பைசா அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மின்கட்டணம் திட்டம் கடந்த மாதம் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது அந்த மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம். எதனாலென்றால், வருவாய் பற்றாக்குறையாக இருந்தது. இதனை ஈடு செய்யவே ஒரு யூனிட்டுக்கு 139 பைசா உயர்த்தலாம் என பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.70 பைசா மட்டுமே தற்போது உயர்த்தியுள்ளதாக KERC ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ரூ.70 பைசா கட்டணத்தில் நிலையான கட்டணமாக 57 பைசாவும், ஆற்றல் கட்டணமாக 13 பைசாவும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிசக்தி மின்சார கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.6 இருந்தது. இந்த கட்டணத்தில் 1 ரூபாய் குறைத்து ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் என அறிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here