எதுக்கு தான் இவ்ளோ வெயில் அடிக்குதோ..! முடியலட சாமி..!

0
10
Why is it so hot..! Sammy is not happy..! read this news now

இந்த வெயில் எதுக்குத்தான் இப்படி மக்களை தாக்குகிறதோ தெரியலையே…! நேற்று சென்னையில் செம்ம வெயில். மக்களை வறுத்து எடுத்து விட்டது என்றே சொல்லலாம். காலைல 9 மணிக்கே வெயிலின் தாக்கம் மிகவும் மோசமானதாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலில் குளித்து கொண்டே தான் வானக ஓட்டிகள் சென்றார்கள்.

விடுமுறை என்றாலே வெளியே சென்று என்ஜாய் பண்ணும் சென்னை வாசிகள் எல்லாம் இந்த வெயிலின் தாக்கத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 13 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாகை, பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. நேற்றைய தினத்தை விட இன்று வெயில் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here