என்னாது ரேஷன் கடையில இனிமே இந்த பொருளை போடமாட்டாங்களா? ஸ்ட்ராங் உத்தரவு…!

0
8
என்னாது ரேஷன் கடையில இனிமே இந்த பொருளை போடமாட்டாங்களா

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்குகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்யுற அளவுக்கு கருப்பட்டி உற்பத்தி இல்லை என்று பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தற்போது அறிவித்துள்ளார்.

இதனை குறித்து அவர் கூறுகையில்…

கடந்த ஓராண்டு காலமாகவே தமிழகத்தில் பனை மரத் தொழிலாளர்களுக்கான நலவாரியம் நன்றாக செயல்பட்டு வருகிறது. 20 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் கடந்த ஆண்டில் வாரியத்தில் சேர்ந்துள்ளனர். மேலும் பனை மரத்தினை வெட்ட கூடாது என்று 110 விதியின் கீழ் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒருவேளை பனை மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும். கருப்பட்டி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. ஆனால் பதநீர் போன்ற பனை பொருட்களை ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அவர் தெரவித்தார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here