Today World News 2023

நாம் தினமும் கலையில் பார்க்கும் சூரியன் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உதிக்கும். இவ்வாறு இரவும் பகலும் மாறி மாறி வரும். இப்படி இயல்பாக இருக்ககூடிய விஷயங்கள் எல்லாமே விண்வெளியில் சற்று மாறுபட்ட நிலையில் உள்ளது. எனினும், அங்கு செல்லும் விண்வெளி வீரர்கள் வித்தியாசமான வாழ்க்கையை வாழ வேண்டும்.
விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்கள் ஒரு நாளைக்கு சூரியனின் உதயத்தையும், அஸ்தமனத்தையும் அவர்கள் பல முறை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. நாம் வாழும் பூமியில் இருப்பதைப் போல சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவு இருக்குமா என்றால் அது நிச்சயம் இல்லை! விண்வெளி வீரர்கள் எல்லாரும் விண்வெளி மையத்தில் தான் இருப்பார்கள். அது பூமியை சுற்றி சுமார் 400 கி.மீ உயரத்தில் நீள்வட்ட பாதையில் வருகிறது.
Also Read >> இனி சிம் கார்டு இல்லாமலே வீடியோ கால் பண்ணலாம்! எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு
இந்நிலையில், விண்வெளியில் ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தையும் அதே போல சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கிறார்கள். மணிக்கு சுமார் 27 ஆயிரம் கி.மீ வேகத்தில் விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி பயணம் செய்கிறது. இதனால் ISS கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சூரிய ஒளியிலும், 45 நிமிடங்கள் இருளிலும் இருக்கும்.