தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தோட டீசர் எப்போது ரீலீஸ்? படக்குழுவின் புதிய அப்டேட்…!

Today Latest Cinima News in Tamil

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Today Latest Cinima News in Tamil

இதனிடையே கடந்த ஜூன் 30 ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இவை சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு கேப்டன் மில்லர் படத்தோட புதிய அப்டேட் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதனையடுத்து, சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கேப்டன் மில்லர் படத்தின் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM