லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே? படக்குழு அறிவித்த புதிய அப்டேட்…!

Today Cinema News 2023

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய படம் தான் ‘லியோ’ திரைப்படம். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்த நிலையில் முதல் கட்டமாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், லியோ படம் குறித்த தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. வருகிற அக்டோபர் 5ம் தேதி இசை வெளியீட்டு விழா தமிழகத்தை தாண்டி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM