Today Tamilnadu News 2023

நேற்றைய தினத்தில் சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்புக்கான மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்த்து பேசியுள்ளார்.
இது குறித்து அந்த விழாவில் பேசிய அவர்…
கொசு, கொரோனா, மலேரியா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அதே போல தான் சனாதனமும். இந்த சனாதானத்தை எதிர்ப்பதை விட முதலில் ஒழிக்க வேண்டும். சனாதனம் அப்டினா என்ன? யாரும் எந்தவொரு கேள்வியும் கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அந்த பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இத்தகைய சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்று பேசினார்.
சனாதனம் குறித்து பேசிய இவரின் பேச்சு தேசிய அளவில் பேசு பொருளாக மாறிவிட்டது. பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில் பா.ஜா.கா இவரின் பேச்சால் அப்படியே அரண்டு போய் இருக்கிறது. மொத்தத்தில் இவர் பேசியது தேதிய அளவில் விவாதமாகவே மாறிவிட்டது.
மேலும், தனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனகளுக்கு நச்சுனு பதில் அளித்துள்ளார். நான் சனாதனத்தை பற்றி பேசியதில் உறுதியாக இருக்கிறேன். கட்டாயம் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும். இந்த சனாதன கோட்பாட்டில், மேலாடை அணிய கூடாது, கோவிலுக்கு செல்ல கூடாது, பெண்களுக்க்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் அத்துனையையும் மாற்றியது இந்த திராவிட மாடல் தான்.
ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. நான் சொன்னது போல நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது. நான் இன்னமும் பேசுவேன். இனிமேலும் பேசுவேன். சனாதனம் என்ற போட்பாட்டை ஒழிக்க வேண்டும். இதானால் என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். என இவ்வாறு கூறியுள்ளார்.