செம்ம காம்போ! சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்! வெளியானது அசத்தலான தகவல்…!

Today Cinema News 2023

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் திஷா பதானி, இந்தி நடிகர் பாபி தியோல், நட்டி நட்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன. வரலாற்று பின்னணி படமாக எடுக்கும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Today Cinema News 2023

இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கும் ‘சூர்யா 43’என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனேவே சுதா கொங்கரா சூர்யாவை வைத்து கடந்த 2020-ஆம் ஆண்டு ‘சூரரைப்போற்று’ இயக்கினார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படமானது தமிழை தாண்டி பல மொழி ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. ‘சூர்யா 43’ படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு இணையாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM