அடிக்கடி தலைவலி வர காரணம் என்ன?

தலைக்கு குளித்ததும் முடியை காயவைக்காமல் உடனே தலையை சீவிக் கொண்டு போவார்கள். தலையில் நீர் தங்குவதால் மிகுந்த தலைவலி வரும்

வெயிலில் செல்லும்போது தலைவலி ஏற்படக்கூடும். ஏனெனில், அளவுக்கு அதிகமான வெப்பம் நம் தலையில் படும் போது வலியை உண்டாக்கும்

நம் உடலில் வியர்வையின் காரணமாக வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இந்த செண்ட் வாசனையானது அதிகமான தலைவலியை ஏற்படுத்தும்

தொடர்ந்து TV பார்ப்பதால் கண்களில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். இந்த எரிச்சலினால்  மிகவும் அதிகமான தலைவலி வரும்

ஒரு மனிதன் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். சரியாக தூங்கவில்லை என்றாலும் தலைவலி அதிகமாக வரும்

அதிகளவு குளிச்சியாக உள்ள குளிர்பானங்களை குடிக்க கூடாது. இந்த குளிர்ச்சி மூளையை உறைய வைத்துவிடும். இந்த காரணத்தினால் சற்று தலை வலிப்பது போல் இருக்கும்

தூங்க செல்லும் போது புத்தகத்தை படிக்க கூடாது! அதே போல் செல்போனை பார்க்கவும் கூடாது. இந்த செயல் கண்களை சோர்வடைய செய்து... தலைவலியை ஏற்படுத்தும்

திட்டமிட்டு செயல்படுங்கள்... தலைவலியை விரட்டுங்கள்...