ஒரு பாத்திரத்தில் சம அளவுள்ள கடலை மாவுடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி, முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் வைத்தப்பிறகு தண்ணீரால் கழுவி விடவும். சருமத்தில் உள்ள ஆழமான அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்கள் போன்றவற்றையும் அகற்றுகிறது.
மெல்லிய ஆப்பிள் துண்டுகளை முகத்தில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து முகத்திலிருந்து அகற்றலாம். ஆப்பிள் முகத்திலுள்ள துளைகளை மூடி, சருமத்தை இறுக்கி, அதிகபடியான எண்ணையை கட்டுபடுத்தி, சருமத்தை ஆரோக்கியமாகவும், தோலின் தோற்றத்தை கவர்ச்சியாகவும் வைக்கிறது.
விதையில்லாத ஒரு கப் பப்பாளியுடன் 1 தேக்கரண்டி புதிய அன்னாசிப்பழத்தை சேர்த்து மென்மையான கலவையாக உருவாக்கி முகத்தில் தடவவும். பின்னர், 5 முதல் 10 நிமிடங்கள் வரை உலர வைத்து கழுவவும். இறந்த சருமத்திலிருந்து விடுபட பப்பாளியை பயன்படுத்தலாம்.
இயற்கையான முறையில் கற்றாழை ஜெல்லை ஒரு நாளுக்கு 2 முறை பயன்படுத்துவதால் முகப்பரு, அரிக்கும் தோல் அலர்ஜி, ஒரு சிறிய வெட்டு உள்ளிட்ட வேறு எந்த வகையான தோல் பிரச்சனையாக இருந்தாலும் சரியாகிவிடும்.
தேயிலையை 5 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கடித்தப்பிறகு குளிர்ந்த அல்லது அரை வெப்பநிலையை அடைந்ததும் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அல்லது ஸ்பிரிட்ஸுக்கு மாற்றி பயன்படுத்தலாம் அல்லது முகத்தை நன்கு கழுவிய பின் ஒரு காட்டன் துணியில் சிறிது ஊற்றி முகத்திற்கு பயன்படுத்தலாம்.
இது ஒரு இயற்கை அழகுகுறிப்பு எனினும், அதை ஒரு போதும் அப்படியே பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது சருமத்தை எரித்து எரிச்சலூட்ட கூடியதாகும். இதை சீரம் அல்லது மாய்ஸ்சரைசரில் 1-2 சொட்டுக்கள் சேர்த்து இரவில் உறங்கும் முன்பு முகத்தில் நேரடியாக தடவலாம்.
நமது தினசரி வாழ்வில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. மனமும் உடலும் அழுத்தமாக இருந்தால் அழகு பொருட்களோ இயற்கை பொருட்களோ உதவுவதை காட்டிலும் அவற்றை சரிசெய்ய தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது.