அதிகாலையில் எழும்போதே தலைவலியா? இதுதான் காரணம்...

நம்மில் சிலருக்கு காலையில் படுக்கையிலிருந்து எழும் பொழுதே தலைவலியை உணர்வோம். மேலும், இது அன்றைய நாளையே முழுதாக வீணடித்து விடும்.

தலைவலி ஏற்பட மன அழுத்தம், நீர் சத்து பற்றாக்குறை, உணவில் சரியான ஊட்டசத்துயின்மை, உறக்கமின்மை போன்ற பற்பல காரணங்களும் இருக்கலாம்.

நமது உடலில் இரத்த சிவப்பணு குறைவாக இருந்தால் (ஹீமோகுளோபின் குறைவதால்) காலையில் தலைவலி ஏற்படும். எழுந்தவுடன் அடிக்கடி தலைவலி ஏற்படுமானால், நீங்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இரத்த சோகை

நமது உடலில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தாலும் தலைவலி ஏற்படும். சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து, அதனை சரி செய்வதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகள் மூலமும் தலைவலியை கட்டுப்படுத்தலாம்.

சர்க்கரை அளவு

தண்ணீரின் அளவு நமது உடலில் குறைவாக இருந்தாலும் தலைவலி வரக்கூடும். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவராக இருந்தால், முதலில் அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

நீரிழப்பு

சரியாக உறங்காமல் இருந்தாலும் தலைவலி ஏற்படும். ஒரு மனிதனுக்கு சராசரியான உறக்கம் என்பது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் மிகவும் அவசியமானது.

தூக்கமின்மை

அதிகாலையில் எழும்போதே தலைவலியா

பைபிள் வாக்குத்தத்த வசனங்கள்