நமது வீட்டிலிருந்தே முகத்திற்கு தேவையான அழகு குறிப்புகளை பயன்படுத்தினால் இயற்கையான அழகை பெற முடியும். சரும பாதுகாப்பு என்று வருகையில் நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது முகத்திற்குதான்.
மஞ்சள் என்றதும் நமக்கு முதலில் தோன்றுவது சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள்தான். மஞ்சளில் உள்ள ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் நமது சருமத்தில் ஏற்படும் அலர்ஜிகளிடமிருந்து நம்மை பாதுகாத்து, எல்லா வகையான சரும பிரச்சினைகளையும் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
வெள்ளரியை பேஸ்ட்டாக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி பேஸ் மாஸ்க்காக முகத்தில் போட்டு நன்றாக உலர்ந்தப்பின் கழுவி விட வேண்டும். இது முகத்திற்கு மேலும் அழகினை சேர்க்கிறது.
வெள்ளரி சாருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து தினமும் இரவு உறங்கும் முன் இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும். சரும பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதோடு சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்து பாதுகாக்கிறது
உலர்ந்த ரோஜா இதழுகளுடன் சிறிய அளவு பன்னீரும், சந்தனமும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிட முகம் பொலிவாக தோன்றும்
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், கற்றாழை இவை அனைத்தையும் முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்
முகம் பளிச்சிட நச்சுனு சில டிப்ஸ் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்