அதிக முடி உதிர்வா? டாப் 10 டிப்ஸ் உங்களுக்காக..!

செம்பருத்தி தலைமுடி அடர்த்தியை அதிகரிப்பதோடு, தலைமுடியின் நிறத்தையும் மேம்படுத்தி, முடி பட்டுப் போல இருக்க உதவுகிறது. செம்பருத்தியையும் அதன் இலையையும் பறித்து, அலசி பேஸ்ட் போல அரைத்து வாரம் ஒரு முறை ஹேர்பேக்காக பயன்படுத்தினால், உதிர்ந்த தலைமுடிகளை மீண்டும் வளர செய்ய முடியும்

1. செம்பருத்தி

2. அதிமதுரம், தேங்காய்ப்பால்

தேங்காய் பாலும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. தேங்காய் பாலுடன் 2 ஸ்பூன் அதிமதுரத்தை சேர்த்து, நன்கு கலந்து தலைமுடிக்கு தேய்க்கவும். இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் என தொடர்ந்து பயன்படுத்தினால் பொடுகு நீங்கி, சில வாரங்களிலேயே தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது.

3. வல்லாரை, நெல்லிக்காய்

வல்லாரை தலையிலுள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை சுறுசுறுப்பாக வைப்பதற்கும், தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் மிகச்சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. வல்லாரைக் கீரை, நெல்லிக்காயை அரைத்து, தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். சில வாரங்களிலேயே தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

4. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கிலுள்ள ஸ்டார்ச் தலைமுடிக்கு நல்ல பொலிவையும், பளபளப்பையும் தருகிறது. தலைக்கு குளிக்கும் போது, ஷாம்பு அல்லது சீயக்காயை பயன்படுத்திய பிறகு உருளைக் கிழங்கு வேகவைத்த தண்ணீரை ஊற்றிவிடாமல் தலைமுடிக்கு பயன்படுத்தலாம்

5. கடலைமாவு

நமது முன்னோர்கள் குழந்தையை குளிக்க வைக்கும் போது, தலைமுடிக்கும் உடலுக்கும் கடலை மாவை பயன்படுத்துவார்கள். கடலைமாவுடன் எலுமிச்சை பழம் மற்றும் தயிர் சேர்த்து ஹேர்பேக்காக தலைமுடிக்கு போடலாம். இதுமட்டுமின்றி சிறிது வினிகரை கடலைமாவுடன் சேர்த்து தலைமுடிக்கு தடவி குளிக்கலாம்

6. சின்ன வெங்காயம்

வெங்காயத்திலுள்ள சல்பர் முடியின் வேருக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியதாகும். ஒரு கப் தண்ணீரில் வெங்காயத்தை போட்டு கொதிக்க விட்டு, ஆற விடவும். குளிக்கும் முன்பு இதை தலையில் தேய்த்து குளிக்கவும். முடி உதிர்தலை குறைத்து முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

7. தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் குளியலை, வாரம் இரண்டு முறை செய்வதால் உடலிலுள்ள சூடு தணிந்து உடலும் ஆரோக்கியம் பெரும். சம அளவில் கடுகு, தேங்காய் எண்ணெயையும் எடுத்து, சூடாக்கி, பிறகு வெதுவெதுப்பான நிலையில் தலைமுடிக்கு ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைக்கு குளிக்கவும்

8. கருப்பு உளுந்து

உடலை ஆரோக்கியமாக வைக்க, கருப்பு உளுந்தை உணவில் பயன்படுத்துவது சிறந்தது. கருப்பு உளுந்தை இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்து குளிக்கும் முன்பு, அதனை அரைத்து தயிருடன் கலந்து தலைமுடிக்கு ஹேர்பேக்காக போடலாம்.

9. ஆயில் மசாஜ்

பொதுவாகவே, ஆயில் மசாஜ் ஊட்டச்சத்துக்களை தலைமுடிக்கு கொண்டு சென்று, தலைமுடியின் வளர்ச்சியைத் பெரிதும் தூண்ட உதவுகிறது. சம அளவு விளக்கெண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் சூடாக்கி, பிறகு வெதுவெதுப்பான நிலையில் தலைமுடிக்கு ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து குளித்தாலே தலைமுடியின் வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும்.

10. முட்டை மஞ்சள் கரு

1. முட்டையின் வெள்ளை கருவை எல்லோரும் பயன்படுத்துவார்கள். ஆனால், மஞ்சள் கருவை அதிகம் பயன்படுத்துவது கிடையாது. இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கரு அதிக நாற்றம் வீசும் என்பதால்தான் learn more

Arrow

இந்த நாற்றத்தை போக்க, எசன்ஷியல் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயை போன்ற வாசனையுள்ள ஏதேனும் ஒன்றை சேர்த்து பயன்படுத்தலாம். learn more 

Arrow

எலுமிச்சை சாறுடன் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் தலைமுடியில் தேய்த்து ஊறவிடவும். பிறகு, கெமிக்கல் குறைவாகவுள்ள ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தலைமுடியை கழுவவும். learn more 

Arrow

வேர்க்கால்களில் தலைமுடி வளர்ச்சியை தூண்டி, அதன் அடர்த்தியை முட்டையின் மஞ்சள் கரு அதிகரிக்க உதவுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தும் புரதச்சத்தும் முட்டையின் மஞ்சள் கருவில் நிறைந்துள்ளதால், தலைமுடிக்கு இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

அதிக முடி உதிர்வா? டாப் 10 டிப்ஸ் உங்களுக்காக..! தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

மட்டன் பிரியாணி செய்வது எப்படி? என  தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்