பெண்களுக்கான சமையல் குறிப்புகள்..!

சமையல் குறிப்புகளில்... மிகவும் முக்கியமாகவும் கவனிக்க கூடியதாகவும் இருக்க வேண்டியது, சமையலறை பொருட்களின் பராமரிப்புக்கான குறிப்புகள் தான்

நீண்ட நாட்களுக்கு பச்சை மிளகாய் அப்படியே இருக்க, நிழலான இடத்தில் அதன் காம்பை நீக்கிவிட்டு வைத்தாலே போதுமானது. பச்சை மிளகாய் கெட்டு போகாமல் இருக்கும். 

பச்சை மிளகாய்

கல்லில் தோசை மாவு ஒட்டிக்கொண்டால், சிறிதளவு புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதனை எண்ணெயை தொட்டு கல்லில் தேய்த்தால் போதும். தோசை கல்லில் ஒட்டாமல் நன்றாக வரும்.

தோசை

தேங்காயை உடைத்து உடனே கழுவி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்படி வைப்பதால் தேங்காயில் பிசுபிசுப்பு தன்மை வராது.

தேங்காய்

நீண்ட நேரம் தயிர் புளிக்காமல் இருக்க, சிறிது இஞ்சியை மேல் தோலை நீக்கி விட்டு, தட்டி போடலாம். இது தயிரை புளிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

தயிர்

புழு-பூச்சிகள் ரவை மற்றும் மைதாவில் வராமல் இருக்க, சமையலுக்கு பயன்படுத்தும் வசம்பை சிறிதளவு தட்டிப் போடலாம். இதனால் மைதாவும் ரவையும் புழு-பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

மைதா, ரவை

பெண்களுக்கான சமையல் டிப்ஸ்..!

முகம் பளிச்சிட நச்சுனு சில டிப்ஸ்