வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்

நேரத்தை வீணாக்க கூடாது. ஒவ்வொரு நொடியையும் மிக முக்கியமாக கருத வேண்டும்.

பணத்தை கவனமில்லாமல் கையாள கூடாது. செலவு செய்யும் 1 ரூபாய் கூட கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். எப்போதும் வார்த்தையில் கவனமாக செயல்பட வேண்டும். 

தவறான பழக்கங்களையும், தவறான முடிவுகளையும் எடுக்க கூடாது. எதை செய்தாலும் பல முறை யோசித்து செய்ய வேண்டும். 

மற்றவர்களுக்குத் தவறான பாதையைக் காட்ட கூடாது. தங்களால் இயன்றவரை நல்லதை மட்டுமே கற்று கொடுக்க வேண்டும். 

உண்மையைத் தவிர வேறு பேச எதையும் பேச கூடாது. பொய் வாழ்கையை அழித்துவிடும் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். 

குறுக்கு வழியை நம்பி போக கூடாது. நல்லதோ, கேட்டதோ... நேர்வழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும். 

ஆபத்தில் உதவாமல் நழுவ கூடாது. உதவியின் மேன்மையை அறிந்து வைத்திருக்க வேண்டும். 

தோல்வியைக் கண்டு துவண்டு போக கூடாது. முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சி வெற்றியை தரும்.