2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியுடன் மோத உள்ளது. இரண்டு அணி வீரர்களும் அட்டகாசமான வீரர்களை கொண்டுள்ளதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆசிய கோப்பைப் போட்டியானது வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்பொழுது 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை நடைபெறும் கிரிக்கெட் போட்டி குறித்த அட்டவணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மட்டும் 88 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 சர்வதேச அணிகளுக்கு எதிராகவும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
Also Read : தளபதி 68 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்..! இணையத்தில் வைரலான நடிகர் விஜய்யின் புகைப்படம்!!
செப்டம்பர் 2023 முதல் மார்ச் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய அணி 36 டி20, 27 ஒருநாள் மற்றும் 25 டெஸ்ட் என 88 போட்டிகளில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலின் முழு விவரம்:
- இந்தியா VS ஆஸ்திரேலியா – 21 போட்டிகள்
- இந்தியா VS இங்கிலாந்து – 18 போட்டிகள்
- இந்தியா VS நியூசிலாந்து – 11 போட்டிகள்
- இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் – 10 போட்டிகள்
- இந்தியா VS தென் ஆப்பிரிக்கா – 10 போட்டிகள்
- இந்தியா VS ஆப்கானிஸ்தான் – 7 போட்டிகள்
- இந்தியா VS இலங்கை – 6 போட்டிகள்
- இந்தியா VS பங்களாதேஷ் – 5 போட்டிகள்