இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெறுவதுடன் வசூல் அளவில் சாதனை படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். லியோ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாரான நிலையில், விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தினை வெங்கட் பிரபு இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்க்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன்றன. இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைகிறார். விஜய் இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என்ற 2 வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் அப்பா கேரக்டருக்கு ஜோதிகாவும், மகன் கேரக்டருக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read : விஜய் ரசிகர்களுக்கு சர்பைரைஸ் கிப்ட் கொடுத்த இயக்குனர்..! தளபதி 68 படத்தின் புதிய அப்டேட்!!