
இந்தியா, தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி வருகின்ற ‘ரோமியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படமாகும்.
‘எனிமி’ படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்துள்ள மிர்னாலினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குட் ஈவில் புரொடக்ஷன்ஸ் பேனரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இத்திரைப்படம் 2024-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான படபிடிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ALSO READ > ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2023
இந்நிலையில், இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளங்களில் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.