சென்னை கோயம்பேட்டில் அதிகரித்த காய்கறி விலை!

0
87

கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை போரூரில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு காய்கறிகள் வருகிறது.

தினசரி 480-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் கடந்த மாதம் வரை விற்பனைக்கு வந்த வண்ணம் இருந்ததால், பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலை முற்றிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனிடையே கனமழையானது, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்ததன் காரணமாக, கடுமையாக காய்கறி உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்கட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து, கடந்த சில நாட்களாகவே குறைந்து போய்விட்டது.

அங்கு காய்கறிகளின் விற்பனைக்கு தற்போது 360 லாரிகள் மட்டுமே வருகிறது. இவ்வாறு குறைந்த வரத்தின் காரணமாக அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளின் விலையானது இரண்டு மடங்கிற்கு அதிகரித்துள்ளது.

மேலும், வெளி மார்கெட்டிலுள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ் மற்றும் கேரட்டின் விலையானது, கிலோ ஒன்றிக்கு ரூ.100 எனவும், முருங்கைக்காய் மற்றும் அவரைக்காயின் விலையானது கிலோ ஒன்றிக்கு ரூ.80 எனவும் விற்கப்படுகிறது. இதே போல முள்ளங்கி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here