US Presidential Elections: டொனால்டு டிரம்புக்கு மேலும் ஒரு மாநிலத்தில் தடை..!

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறினார். அதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி நாடாளுமன்றத்தில் மன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

US Presidential Elections News Donald Trump banned in one more state

பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வன்முறையை தூண்டியதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன. எனவே கொலராடோ மாநில கோர்ட் டிரம்பை தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும் டிரம்பின் பெயர் கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலை தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் இருக்க கூடாது எனவும் உத்தரவிட்டது.

ALSO READ : கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை! காவல் துறை தகவல்!

இந்த மாநிலத்தை தொடர்ந்து மைனே மாநில வெளியுறவுத்துறை மந்திரி ஷென்னா பெல்லோஸ் கூறுகையில் “மைனே மாநிலத்திலும் குடியரசு கட்சியின் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது எனவும், ட்ரம்பின் அறிவுறுத்தலின் பேரில் தான் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன” என்றார்.

டிரம்ப் போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என நாட்டின் உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இருந்த போதிலும் மைனே மாநிலம் தனிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது. டிரம்ப் இந்த முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top