Today Sports News 2023

நியூயார்க் நகரில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அப்போட்டி ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் மற்றொன்றில், கார்லஸ் அல்காரஸ் மற்றும் மெத்வதேவ் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர்.
Also Read >> டிக்கெட் புக்கிங்கில் களைகட்டும் தளபதி விஜயின் லியோ… ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே மாபெரும் சாதனை…!
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் திறமையாக விளையாடிய மெத்வதேவ், முதல் இரண்டு செட்டை 7-6 (7-3), 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து நடைபெற்ற 3வது ஆட்டத்தில் அல்காரஸ், 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதையெடுத்து 4வது செட்டில் தனது முழு திறமையை வெளிபடுத்திய மெத்வதேவ் 6-3 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து நடக்கவிருக்கின்ற இறுதி போட்டியில் மெத்வதேவ் மற்றும் ஜோகோவிச் மோத உள்ளனர்.