இளங்கலை மருத்துவம் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு, நீட் தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே, மாணவர் சேர்க்கையானது நடைபெறும் என்று புதுச்சேரி மாநிலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க சென்டாக் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரியிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளிலுள்ள இளங்கலை மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கான இடங்களுக்கு, சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழியில் செப்டம்பர் 25-ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.