அச்சச்சோ… ஜவான் படத்தின் காட்சிகளை திருடிட்டாங்களா? புகார் அளித்த படக்குழு…!

Today Cinema News 2023

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் உருவான படம் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தினை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். சமீபத்தில் வந்த ஜவான் பட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.

இந்நிலையில், ஜவான் படத்தின் சில காட்சிகளை திருடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக ஜவான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக எடுக்கும் இப்படத்தின் காட்சிகள் ரிலீஸ் தேதிக்கு முன்னாடியே வெளியே வரக்கூடாது என ரொம்ப கவனமாக இருந்தாகவும், ஷீட்டிங்கின் போது படக்குழுவினர் யாரும் மொபைல் போன் ஏதும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி யாருரோ சிலர் ஜவான் படத்தோட காட்சிகளை திருடி இணையத்தில் வெளியிட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர். மேலும் போலீசார் சந்தேகப்படும்படியான டிவிட்டர் கணக்கு வைத்திருப்போரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM