அமெரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் 20 பேர் காயமடைந்துள்ளனர்

அமெரிக்காவில் நேற்று மாலை 3 மணியளவில் நியூயார்க் மாகாணம் மேன்ஹாட்டன் நகர ரெயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

ALSO READ : BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வந்திருக்கு! உடனே டைரக்ட் இண்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க…!

புறநகர் ரயிலில் 300 பயணிகள் பயணம் செய்தனர். பணிமனைக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. இந்த இரண்டு ரயில்களும் 96வது தெரு ரெயில் நிலையத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இரண்டும் மோதிக்கொண்டதால் ரெயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விட்டது.

இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். இரண்டு ரெயில்களும் மெதுவான வேகத்தில் பயணித்ததால் விபத்தில் பெரும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. உடனே காயம் அடைந்த அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சில மணி நேரம் மேன்ஹாட்டன் நகரில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றிய பின்னர் ரெயில் சேவை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வழக்கம் போல செயல்பட தொடங்கியது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top