தல அஜித்துடன் மீண்டும் இணையும் இரண்டு கதாநாயகிகள்! யாருனு தெரியுமா? விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்…!

Today Latest Cinema News 2023

தமிழ் திரையுலகிலே முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார் ஆவார். சமீபத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. இதனையடுத்து, தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் தல அஜித் நடிக்கிறார். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கான முதல் கட்டப்படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இப்படத்தில் யாரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என படக்குழு ஆலோசித்து வந்தது. தற்போது, விடாமுயற்சி படத்தில் திரிஷா மற்றும் தமன்னா இணைந்து நடிக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM