பிக்பாஸ் கவினுக்கு டும் டும் கல்யாணம்…! பொண்ணு யார் தெரியுமா?

Latest Cinema News in Tamil 2023

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் கவின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதேபோல் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை போன்ற திரைப்படத்தில் சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதனையடுத்து, இவர் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ்ஸில் கலந்துகொண்டார், அதில் பட்டி தொட்டி எங்கும் இவர் பெயர் பரவி இருந்தது. அதனை தொடர்ந்து லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார். அதன்பின்னர் டாடா என்ற திரைப்படம் மூலம் ரசிகர்களின் வரவேற்போடு செம்ம ஹிட்டானது.

இந்நிலையில், கவினுக்கு திருமணம் செய்துவைக்க பொற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மாதம் 20ஆம் தேதியில் கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளது. வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள கவின் ஓகே சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். சீக்கிரம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM