டாப் 10 பியூட்டி டிப்ஸ் – மிருதுவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்க்கு…

0
141

அதிக அளவு உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவினை உட்கொள்வதன் மூலமாகவும் இரசாயனமில்லாத பொருட்களை நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதன் மூலமாகவும் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். அது எண்ணெய், சாதாரண, உலர்ந்த அல்லது உணர்திறன் கொண்ட சருமமாகவும் இருக்கலாம். எல்லா வகையான தோலுக்கும் பொருந்தும். உங்கள் சருமத்தை இயற்கையாக அழகுபடுத்தவும், இயற்கையின் சக்தியை பயன்படுத்தி கொள்ளவும் இந்த முறையை நீங்கள் தேர்வு செய்யலாம். இங்கு உங்களுக்கு தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்ளும் வகையில் முக அழகு குறிப்புகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி சருமத்திற்கு எந்த விதமான எரிச்சலும் இல்லாமல் விரும்பிய பளபளப்பை பெறுவதற்கான ஒரு வழியாகும்.

1. குளிர்ந்த தேநீர் பைகள் – வீங்கிய கண்களை சரிபடுத்தும்:

தேநீர் பைகள்

வீட்டில் தினமும் கிரீன்டீ குடிப்பவரா நீங்கள்? அப்படியானால் இதை கவனியுங்கள். பயன்படுத்திய தேநீர் பைகள் உபயோகப்படுபவைதான். அடுத்த முறை பயன்படுத்திய பின், அதை வீணென்று நினைத்து எரிந்து விட வேண்டாம். நமது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற கூடிய இந்த பச்சை தேயிலை பைகள் சருமத்திற்கு பற்பல நன்மைகளை தருகின்றன. இந்த வகையான முக அழகு குறிப்புகளை இயற்கையான முறையில் பயன்படுத்துவதால், பல அதிசயங்களை தருகின்றன. கண் இமைகளில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை தேநீர் பைகளை வைத்து ஓய்வெடுக்கவும். இது நமது கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை குறைத்து, கண்கள் பிரகாசமாக மாற உதவுகிறது.

2. கடலை மாவு – இறந்த தோல் செல்களுக்கு:

கடலை மாவு

வெயிலால் பாதிப்பு அடைந்த மற்றும் இறந்த தோல் செல்களை கொண்ட சருமத்திற்கான மிகச்சிறந்த தீர்வு கடலை மாவு. மிருதுவான, மென்மையான மற்றும் இயற்கையான முறையில் ஒளிர கூடிய சருமத்தை பெற விரும்பினால், ஒரு பாத்திரத்தில் சம அளவுள்ள கடலை மாவுடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் வைத்தப்பிறகு தண்ணீரால் கழுவி விடவும். இது சருமத்தில் உள்ள ஆழமான அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்கள் போன்றவற்றையும் அகற்றுகிறது. இதனால் சருமம் பிரகாசமாக மாறுகிறது.

3. தக்காளி – எண்ணெய் சருமத்திலிருந்து விடுதலை:

தக்காளி

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வானிலை பெரும்பாலான பகுதிகளில் ஈரப்பதமாக இருக்கும். இந்த மாதிரியான பகுதிகளில் அதிகப்படியான எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மிகவும் பொதுவானவர்களே. லைகோபீனுடன் செறிவூட்டப்பட்டவையாக உள்ள தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சிறந்த குளிரூட்டும் மற்றும் அஸ்ட்ரிஜெனட் பண்புகளும் உள்ளன. இது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை கட்டுபடுத்துவதோடு அதிகப்படியான எண்ணெயிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இந்த வகையான அழகு குறிப்புகள் சருமத்திலுள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற வயதான தோற்றத்துக்குரிய அறிகுறிகளை குறைக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும் பயன்படுகிறது. ஒரு தக்காளியை நன்கு அரைத்து கூழாக்கி முகத்தில் தடவியபின்பு 15 நிமிடங்கள் வரை உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவிடவும். இப்போது இயற்கையான ஒளிரும் பளபளப்பான சருமத்தை பெற முடியும்.

4. வெள்ளரி மற்றும் எலுமிச்சை – பிளாக்ஹெட்ஸ்:

வெள்ளரி மற்றும் எலுமிச்சை

பிளாக்ஹெட்ஸ் உடன் தினசரி போராடுகிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு. பொதுவாக பிளாக்ஹெட்ஸ் தோலை மந்தமாகவும், சோர்வாகவும் வைக்கும். எனவே இயற்கையான முறையில் பிளாக்ஹெட்ஸிலிருந்து விடுபடுவது அவசியமாகும். இதற்கு வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு கலவையை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு பிரகாசத்தையும் ஒளிரும் பொலிவையும் கொடுக்கும். குளிப்பதற்கு முன்பு, வெள்ளரி சாருடன் எலுமிச்சை சாற்றையும் சம அளவாக எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை வைத்து கழுவிடவும். இது சருமத்தை பிரகாசமாக வைப்பதோடு மட்டுமல்லாமல் பிளாக்ஹெட்ஸ் குறையவும் உதவுகிறது. இது அனைத்து தோல் வகைக்கும் ஏற்றது.

5. ஆப்பிள் – திறந்த துளைகளிடமிருந்து பாதுகாக்கும்:

ஆப்பிள்

விரிவாக்கப்பட்ட துளைகள் சருமத்தை முதிர்ச்சி அடையவும், எண்ணெய் மிக்கதாகவும், தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அழுக்குகளை ஈர்க்கவும் செய்கிறது. இது சருமத்திற்கு பாதிப்பை தரக்கூடியதாகும். இதனை குணப்படுத்த முகத்தில் மெல்லிய ஆப்பிள் துண்டுகளை வைத்து 15 நிமிடங்கள் கழித்து முகத்திலிருந்து அகற்றலாம். இதுமட்டுமல்லாது ஆப்பிள், வினிகர், தேன், முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். இதனை தோலில் 30 நிமிடங்கள் வரை உலர விட்டு கழுவலாம். ஆப்பிள் முகத்திலுள்ள துளைகளை மூடி, சருமத்தை இறுக்கி, அதிகபடியான எண்ணையை கட்டுபடுத்தி, சருமத்தை ஆரோக்கியமாகவும், தோலின் தோற்றத்தை கவர்ச்சியாகவும் வைக்கிறது.

6. பப்பாளி – சருமத்தை மென்மையாக்கும்:

பப்பாளி

இறந்த சருமத்திலிருந்து விடுபட பப்பேன் எனப்படும் பப்பாளியை பயன்படுத்தலாம். இயற்கை நொதியால் உட்செலுத்தப்பட்ட பப்பாளி இயற்கையாகவே சருமத்தை மென்மையாக்கும். பழுக்காத பப்பாளியில் அதிக அளவு பப்பேன் இருப்பதால், இறந்த சரும செல்கள் மற்றும் பிற அசுத்தங்களையும் சருமத்திலிருந்து அகற்றுகிறது. உணர்திறன் வாய்ந்த தோல் உள்ளவர்களும் பப்பாளிப்பழத்தை பயன்படுத்தலாம். ஏனெனில், இதில் எதிர்வினையைத் தூண்டும் வாய்ப்பு குறைவுதான். விதையில்லாத ஒரு கப் பப்பாளியுடன் 1 தேக்கரண்டி புதிய அன்னாசிப்பழத்தை சேர்த்து மென்மையான கலவையாக உருவாக்கி முகத்தில் தடவவும். பின்னர், 5 முதல் 10 நிமிடங்கள் வரை உலர வைத்து கழுவவும்.

7. கற்றாழை – எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்தும்:

கற்றாழை

ஒளிரும் தோற்றமளிக்கக்கூடிய ஆரோக்கியமான சருமத்திற்கு கற்றாழை சிறந்த மருந்து. எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்துவது முதல் ஊட்டச்சத்து அளிப்பது வரை சருமத்திற்கு மிகுந்த பயனை அளிக்கிறது. இயற்கையான முறையில் கற்றாழை ஜெல்லை ஒரு நாளுக்கு 2 முறை பயன்படுத்துவதால் முகப்பரு, அரிக்கும் தோல் அலர்ஜி, ஒரு சிறிய வெட்டு உள்ளிட்ட வேறு எந்த வகையான தோல் பிரச்சனையாக இருந்தாலும் சரியாகிவிடும்.

8. டோனராக கிரீன் டீ:

டோனராக கிரீன் டீ

தினசரி ஒரு சிடிஎம் வழக்கத்தைப் பின்பற்றினால், டோனரின் முக்கியத்துவத்தை உணர்வீர்கள். வெள்ளை மற்றும் பச்சை தேயிலை இரண்டையும், மேற்பூச்சுடன் பயன்படுத்தும் பொழுது பிரகாசமான, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நீரேற்றும் பண்புகளை பெற்றுள்ளது. தேயிலையை 5 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கடித்தப்பிறகு குளிர்ந்த அல்லது அரை வெப்பநிலையை அடைந்ததும் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அல்லது ஸ்பிரிட்ஸுக்கு மாற்றி பயன்படுத்தலாம் அல்லது முகத்தை நன்கு கழுவிய பின் ஒரு காட்டன் துணியில் சிறிது ஊற்றி முகத்திற்கு பயன்படுத்தலாம்.

9. தேயிலை எண்ணெய் – பருக்களிடமிருந்து பாதுகாக்கும்:

தேயிலை எண்ணெய்

அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுக்கு தேயிலை எண்ணெய் பெயர் பெற்றது. இது கிருமிகள் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய முகப்பருவை அழிப்பதோடு, லேசான முகப்பருவையும் சரிப்படுத்துகிறது. இது ஒரு இயற்கை அழகுகுறிப்பு எனினும், தேயிலை அத்தியாவசிய எண்ணெயை முதலில் நீர்த்துப்போகச் செய்யாமல் அதை ஒரு போதும் அப்படியே பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது சருமத்தை எரித்து எரிச்சலூட்ட கூடியதாகும். இதை சீரம் அல்லது மாய்ஸ்சரைசரில் 1-2 சொட்டுக்கள் சேர்த்து இரவில் உறங்கும் முன்பு முகத்தில் நேரடியாக தடவலாம்.

10. தியானம் – முழு ஆரோக்கியத்தையும் தரும்:

தியானம்

நமது தினசரி வாழ்வில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. மனமும் உடலும் அழுத்தமாக இருந்தால் அழகு பொருட்களோ இயற்கை பொருட்களோ உதவுவதை காட்டிலும் அவற்றை சரிசெய்ய தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. கவலை மற்றும் மன அழுத்தத்தால் சில வகையான தோல் பாதிப்புகள் மேலும் மோசமடைகின்றன. இவற்றை சரி செய்ய நல்ல இரவு தூக்கம், மிதமான உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்றவையும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உண்மையில், இயற்கையான முக அழகு குறிப்புகளுடன் நல்ல தோல் பராமரிப்பை பின்பற்றுகையில், மேலும் ஆரோக்கியமான மாற்றத்தை பெறலாம்.


RECENT POSTS IN VALAIYITHAL:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here