Toll Gate Charges Hike in Tamilnadu
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கின்ற சுங்கச்சாவடிகளில ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி (இன்று நள்ளிரவு) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read>> SK21 சிவகார்த்திகேயன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
கார், வேன், ஜீப் உள்ளிட்ட போன்ற வாகனங்கள் ஒருமுறை சென்று வருவதற்கு பழைய கட்டணம் ரூ.85 இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்று வருவதற்கு ரூ.125 இருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாத கட்டணம் ரூ.2505 இருந்து ரூ.2740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்று வருவதற்கு ரூ.145 இருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்று வருவதற்கு ரூ.220 இருந்து ரூ.240 ஆகவும், மாத கட்டணம் ரூ.4385 இருந்து ரூ.4800 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கவரி கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.