இன்று நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வு..! இத்தனை சதவீதம் பேர் பங்கேற்பு!

0
46

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமானோர் எழுதினர். இன்று நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் 81.76 சதவீதம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறை, சிறைத்துறை, ஆயுதப்படை, தமிழ்நாடு காவல்படை ஆகிய துறைகளில் உள்ள மொத்தம் 3552 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 295 தேர்வு மையங்களில் இந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், இந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு சேலத்தில் மட்டும் 22 மையங்களில் சுமார் 21,000 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.40 மணி வரை நடைபெற்றது. தமிழ் மொழி, பொது அறிவு, உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 150 வினாக்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த தேர்விற்காக தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுப்பட்டிருன்தனர். தேர்வு எழுதும் தேர்வாளர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்வு எழுதும் போது பேசவோ, சைகை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here